பாலிவுட் நடிகரான ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் ஜவான். விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி என பலர் நடித்துள்ளனர்.

பெண் கைதிகளின் ஜெயிலராக இருக்கும் ஷாருக்கான் தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சிறைச்சாலையில் உள்ள 6 பெண்களை வைத்து மக்களுக்கு எதிராக நடக்கும் தீமைகளால் அரசாங்கத்தை எதிர்த்து போராடுகிறார்.

இதில் தன்னுடைய ஆசாத் என்ற பெயரை மறைத்து ’விக்ரம் ரத்தோர்’ என்ற அடையாளத்துடன் அரசாங்கத்தை எதிர்க்கிறார். ஷாருக்கான் மற்றும் இந்த 6 பெண்களும் இப்படி மாறுவதற்கு காரணமாக இருப்பவர் வில்லன் விஜய் சேதுபதி தான்.

வில்லன் விஜய் சேதுபதிக்கும் ஹீரோ ஷாருக்கானுக்கும் இடையே உள்ள பிரச்சனை என்ன? மக்களுக்காக போராடிய ஷாருக்கான் போராட்டம் வெற்றி பெற்றதா? என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி என படத்தில் நடித்துள்ள அனைவரும் எஃபெக்ட் எடுத்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

அனிருத் இசை படத்திற்கு பெரிய பலம்.

அட்லீ ஆக்ஷன், எமோஷன் என அனைத்தும் கலந்த கதையை கையில் எடுத்து திறம்பட இயக்கி உள்ளார்.

மொத்தத்தில் ஜவான் – சரவெடி ட்ரீட்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.