ஜவான் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

தற்போது பாலிவுட் திரை உலகில் அறிமுகமாகியுள்ள இவர் தனது முதல் படமாக ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்லா வரவேற்பை பெற்றிருந்தது.

அதன் பிறகு படத்தில் உள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்களை படக்குழு அவ்வப்போது ஒவ்வொன்றாக வெளியிட்டு வரும் நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, மொட்டை தலையுடன் ஷாருக்கான் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.