ஜவான் திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரை உலகின் டாப் ஹீரோவான ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. நயன்தாரா, தீபிகா படுகோனே, யோகி பாபு, விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் சிறப்பு முன்னோட்ட வீடியோவும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படம் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ஷாருக்கானின் என்ட்ரி பாடலில் 1000 பெண் நடன கலைஞர்கள் நடனம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்காக சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெண் நடன கலைஞர்களை படகுழுவினர் அழைத்து வந்ததாகவும் ஐந்து நாட்களுக்கு நடைபெற்ற இப்பாடலுக்கான படப்பிடிப்பிற்காக ரூ.15 கோடி வரை படக்குழு செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.