
நாடு முழுவதும் ஜவான் படத்திற்கு ப்ரமோஷன் பட்டைய கிளப்பும் வகையில் நடைபெற்று வருகின்றன.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் இரவாக வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா, பிரியாமணி, தீபிகா படுகோனே உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.
படத்தின் டீசர் பாடல்கள் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது. இப்படியான நிலையில் ஜவான் படத்தின் ப்ரமோஷனும் வேற லெவலில் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் ஷாருக்கான் ரசிகர்கள் படத்தை வெவ்வேறு விதமாக ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் உணவு வழங்கி படத்தை பிரமோஷன் செய்துள்ளனர்.

சில இடங்களில் வால் போஸ்டர் ஒட்டியும் சில இடங்களில் தியேட்டரில் டீசரை ரிலீஸ் செய்தும் பிரமோஷன் செய்துள்ளனர். இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.