ஜனநாயகன் படத்தின் கேமியோ ரோலில் முன்னணி இசையமைப்பாளர்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

ஜனநாயகன் படத்தின் கேமியோ ரோலில் முன்னணி இசையமைப்பாளர் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும்,H. வினோத் இயக்கத்திலும் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் மமீதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் கேமியோ ரோலிங் லோகேஷ், அட்லி ,நெல்சன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் தரும் விதமாக இந்த படத்தின் இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
