விபத்தில் ஒரு பிக் பாஸ் போட்டியாளர் இறந்து போனது போல கனவு கண்டதாக ஜேம்ஸ் வசந்த் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். ‌‌‌‌

James Vasanth About Bigg Boss Contestant : தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜேம்ஸ் வசந்த். இவர் சில நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளராக தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

திருவாதிரை நாளில், ஆருத்ரா தரிசனம் நன்மையாம்.!

இந்த நிலையில் இவர் தற்போது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ட்விட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த ட்வீட்டில் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் விபத்து ஒன்றில் உயிரிழந்தது போலவும் அவருக்கு தி நகரில் உள்ள பழமையான கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இறுதிச்சடங்கு நடப்பது போலவும் கனவு கண்டேன்.

அவரை இதற்கு முன்பாக நான் பார்த்ததோ அவரைப் பற்றிச் சிந்தித்தது கூட கிடையாது. அப்படி இருக்கையில் இது எப்படி நிகழ்ந்தது என தெரியவில்லை என கூறியுள்ளார். இவருடைய பதிவை பார்த்த ரசிகர்கள் நீங்கள் பிக்பாஸ் பற்றி நினைத்துக் கொண்டு இருப்பீர்கள் அதனால் இப்படி கனவு கண்டிருக்கலாம் என கூறி வருகின்றனர்.

என் பொண்ணு என் மானத்தை காப்பாத்திட்டாள் – Director Perarasu Emotional Speech | HD

அதே சமயம் நீங்கள் கனவு கண்டதை போல யாருக்கும் எதுவும் நடக்கக் கூடாது எனவும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.