
ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்க ரஜினிக்கு கலாநிதி மாறன் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதுவரை படம் கிட்டத்தட்ட ரூ 525 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. ஜெயிலர் படத்தில் வெற்றியால் சன் பிக்சர்ஸ் குமாருக்கு வெறும் காரை மட்டும் பரிசாக கொடுக்காமல் அடுத்த படத்தையும் கொடுத்துள்ளது. மேலும் அந்த படத்திற்கு சம்பளமாக 55 கோடி ரூபாய் தருவதாக வாக்கு கொடுத்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு கிப்ட் ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்த கிப்ட் ஒரு காசோலை என்பது தெரிய வந்துள்ளது.