ஜெய்லர் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய திரை உலகில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெய்லர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, சிவராஜ்குமார் உள்ளிட்ட பழமொழி உச்ச நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் டப்பிங்கில் ரஜினியை தொடர்ந்து நடிகர் விநாயகம் கலந்து கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக நடிகர் சிவராஜ்குமார் டப்பிங் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் பிரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.