ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டிற்கான அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் “ஜெயிலர்” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.

அதிரடியான சண்டை படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்னும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி மிரட்டியுள்ளார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து இப்படத்தில் இருந்து அனிருத் இசையமைப்பில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் வெளியாகி நல்லா வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தொடர்பான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 2 அல்லது 3 ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இது தொடர்பான அறிவிப்பினை படக்குழு விரைவில் வெளியிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவை காலை 9 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.