11 நாளில் ஜெயிலர் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வெளிவந்த இத்திரைப்படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸான இந்த படம் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படியான நிலையில் இந்த படம் 11 நாளில் ரூ 500 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன