ஜெய்லர் திரைப்படத்தின் தரமான போஸ்டர் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஏராளமான பலமொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் கவர்ந்திருந்ததை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ட்ரெய்லரும் வெளியாகி படம் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மோகன்லாலும் ரஜினியும் நேருக்கு நேர் அமர்ந்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அப்போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி லைக்குகளை குவித்து வருவதோடு, இந்த காம்போவ பாக்கதான காத்திருக்கோம் என்று கமெண்ட் செய்து ஃபயர் இமேஜ்களை பதிவிட்டு வருகின்றனர்.