ஜெய்லர் திரைப்படம் குறித்து வெளியான முதல் விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரம்யா கிருஷ்ணன், தமன்னா சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், விநாயகன், வசந்த் ரவி, சுனில் உள்ளிட்ட ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசை அமைத்துள்ளார். இவரது இசையமைப்பில் ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையதளத்தை அதிர விட்டு வருகிறது.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்ததை தொடர்ந்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதற்காக காத்திருக்கும் நிலையில் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தின் முதல் விமர்சனம் வியாபார ரீதியாக பேசப்படும் பிரபலங்கள் மத்தியில் இருந்து வெளியாகி உள்ளது. அதன்படி, ஜெய்லர் படம் மூலம் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே மெகா கம்பேக் கொடுத்துள்ளதாக பதிவின் மூலம் தெரிவித்துள்ளனர். இந்த பதிவு இப்படம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.