ஜெய்லர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ குறித்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகவுள்ளது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பலமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் பல மொழி உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “காவாலா” என்னும் நடிகை தமன்னா இடம்பெற்று இருக்கும் பாடல் வரும் ஜூலை 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு நேற்றைய முன்தினம் ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோவுடன் அறிவுத்திருந்தது. இந்த நிலையில் அந்த புரோமோ வீடியோ யூடியூபில் நம்பர் 1 இடத்தை பிடித்து வைரலாகி வருவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.