
ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர்.

நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழகத்தில் மட்டும் இந்த படம் ரூ 29.46 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் என தெரியவந்துள்ளது.
அதாவது, இந்திய அளவில் 55 கோடி ரூபாயும் உலகளாவிய வசூலாக ரூ 96 கோடியும் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் நாளே ரூ 100 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காதது ரசிகர்களை கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.
இருந்தாலும் தொடர் விடுமுறை என்பதால் விரைவில் 200 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
