ஜெய்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக கடந்த 28ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளம் முழுவதும் ஆக்கிரமித்து வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெய்லர் திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி வரும் 6 ஆம் தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு ரசிகர்களும் வெயிட்டிங் எனக் கமெண்ட் செய்து இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.