வசந்தபாலனின் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஜெயில் திரைப்படம் எப்படி இருக்கு என்பதை பார்க்கலாம் வாங்க.

Jail Movie Review : ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்னதி நடிக்க வில்லனாக ரவிமரியா நடித்துள்ளார்.

ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

படத்தின் கதைக்களம் :

சென்னையில் பல்வேறு இடங்களில் குடிசை வீடுகளில் தங்கி இருந்தவர்களை அரசு சென்னைக்கு 30 கிலோமீட்டர் தொலைவில் காவேரி நகர் என்ற பகுதியில் குடியமர்த்துகிறது. அந்தப் பகுதியில் லோக்கல் திருடனாக இருந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். இவருடன் நந்தன் ராம், பசங்க பாண்டி ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். நந்தன் ராம் கஞ்சா கடத்தும் வேலையை செய்கிறார்.

இவர்களுக்கு எதிரணி ஒன்று உள்ளது. இந்த இரண்டு அணிகள் இடையே ஏற்பட்ட பகையில் நந்தன் ராம் கொலை செய்யப்படுகிறார். நண்பன் கொலை செய்யப்பட்ட கோபத்தில் பசங்க பாண்டி எதிரணியில் ஒருவரை தீர்த்து கட்டுகிறார். பிறகு அவர் ஜெயிலுக்கு செல்ல ஜிவி பிரகாஷ் அதனை வெளியே எடுக்க முயற்சி செய்கிறார். அதன்பிறகு கதையில் என்னவெல்லாம் நடக்கிறது கடைசியில் ஜிவி பிரகாஷ் என்னவானார் என்பது தான் இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

ஜிவி பிரகாஷ், நந்தன் ராம் உள்ளிட்டவர்கள் அவர்களது அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

அபர்னதி, ஜிவி பிரகாஷ் இடையேயான கெமிஸ்ட்ரி கச்சிதமாக ஒர்கவுட் ஆகியுள்ளது.

படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவி மரியா வில்லனாக நடித்துள்ளார். அவரே இரண்டு குழுக்களை வளர்த்து அவர்களுக்குள் சண்டை வர வைத்து கலவரத்தை உண்டு செய்கிறார். ‌‌

ராதிகா அம்மா வேடத்தில் அழகான நடிப்பை நடித்துள்ளார்.

எல்லாரும் வாழ்ந்து இருக்காங்க – Jail Movie Exclusive Celebrity Show | G.V.Prakash, Abarnathy

இசை :

படத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. காத்தோட காத்தாட பாடல் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவு :

கண்ணகி நகர் பகுதி பிரச்சனைகளை அழகாக படமாக்கியிருந்தார் ஒளிப்பதிவாளர். ‌‌‌‌‌‌‌‌

இயக்கம் :

குடிசை மாற்று வீடுகளால் சென்னை விட்டு வெளியே சென்ற மக்கள் படும் அவதிகளை மட்டுமல்லாமல் அதற்குள் கஞ்சா கடத்தல், கலவரம் போன்ற விஷயங்களையும் சேர்த்து சொல்லியுள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.

REVIEW OVERVIEW
ஜெயில் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
jail-movie-reviewமொத்தத்தில் ஜெயில் சில இடங்களில் தடுமாறினாலும் சொல்ல வேண்டிய விஷயத்தை சரியாக சொல்லியுள்ளது.