சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இறுதிச்சுற்றில் வெளியேறியுள்ளது.

JaiBhim Exit From Oscar Awards : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஜெய் பீம்.

பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் மாபெரும் வெற்றி அடைந்த இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனை சூர்யா ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி தீர்த்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு இறுதிப்போட்டிக்கு தேர்வான திரைப்படங்கள் லிஸ்ட் வெளியானது. இந்த லிஸ்டில் ஜெய்பீம் திரைப்படம் இடம்பெறவில்லை.

இதனால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். ஆஸ்கர் கனவு எல்லாம் இப்படி தவிடு பொடியாகிடுச்சு என வருத்தப்பட்டு வருகின்றனர்.

ஆனாலும் ஒரு தமிழ் திரைப்படம் ஆஸ்கர் விருது இந்த அளவிற்கு சென்றது பாராட்ட வேண்டிய ஒன்று என திரையுலகினர் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.