ஜகமே தந்திரம் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Jagame Thanthiram Movie Review : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம். இந்த இன்று 17 மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் இணையதளம் வழியாக வெளியாகியுள்ளது.

கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை பார்ப்போம் வாங்க.

தனுஷ் ஏன் இதுக்கு ஓகே சொன்னாரு?? ஜகமே தந்திரம் விமர்சனம்

படத்தின் கதைக்களம் :

பரோட்டா கடை நடத்தி கொண்டு அதோடு அடிதடி பிரச்சனைகளிலும் ஈடுபட்டு வருபவர் தனுஷ். மதுரை ஒரு கொலையைச் செய்துவிட்டு தலைமறைவாக வேண்டிய சூழலில் லண்டனில் ஒரு அடிதடி வேலை கிடைக்கிறது. இதனையடுத்து லண்டன் செல்லும் தனுஷ் அங்கு ஜேம்ஸ் காஸ்மோபாவிடம் வேலைக்கு சேர்கிறார். ஜேம்ஸ் எதிரியான ஜோஜூவை கொன்று விடுகிறார்.

அதன் பின்னர் தான் ஜோஸ் அகதிகளுக்காக உதவி செய்பவர் என அறிந்ததும் ஜேம்ஸை எதிர்க்க துணிகிறார். இன்னொரு பக்கம் அகதி பெண்ணான ஐஸ்வர்யா லட்சுமியுடன் காதல் மலர்கிறது. இறுதியாக என்ன நடக்கிறது என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

பேட்ட, காலா, கபாலி உள்ளிட்ட படங்களில் கலவை போல இந்த படம் உருவாகியுள்ளதாகவே தோன்றுகிறது. பேட்ட படத்தில் ரஜினி கொஞ்ச நேரம் வந்த கெட்டப்பை தனுஷை வைத்து படம் முழுக்க கார்த்திக் சுப்பராஜ் கொண்டு சென்றுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.

நடிப்பு :

தனுஷ் அவரால் முடிந்த அளவுக்கு படத்தை தாங்கிப் பிடிக்கிறார்.

ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை.

ஜேம்ஸ் காஸ்மோரா பார்பி பழைய படங்களில் வில்லன் போல காட்சியளிக்கிறார்.

ஜோசி திருப்புமுனையாக இருப்பார் என எதிர்பார்த்தால் இன்டர்வெல் பிளாக்கில் அவரைக் கொன்று விடுகிறார்கள்.

இசை :

சந்தோஷ் நாராயணன் இசை ஓகே. ரகிட ரகிட பாடல் மட்டும் ஆட்டம் போட வைக்கிறது.

இயக்கம் :

பீட்சா போன்ற தரமான படங்களை கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தில் ஏன் கோட்டை விட்டார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.