
சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 5வது சீசனில் விளையாட உள்ள சென்னையின் எப்சி அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக தமிழக வீரர் தனபால் கணேஷ் இடம் பெறவில்லை.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 5வது சீசன் இம்மாதம் 29ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி அணி வீரர்கள் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, வீரர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: அணியில் இந்தமுறை நிறைய இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். கோல் கீப்பர் கரண்ஜித் சிங் இந்தமுறையும் அணியில் தொடர்கிறார். அவருடன் மேலும் 2 கோல்கீப்பர்களும் இடம் பெற்றுள்ளனர்.
அணி விவரம் :
கோல் கீப்பர்கள்: கரண்ஜித் சிங், சஞ்சிபன் கோஷ், நிகில் பெர்னார்ட்.
தடுப்பு ஆட்டக்காரர்கள்: மெயில்சன் ஆல்வெஸ் (பிரேசில்), இனிகோ (ஸ்பெயின்), லால்ரின்சுவாலா, டோன்டன்பா சிங், லால்சின்லியனா, சோமிங்கலியனா, ஹென்றி ஆண்டோனய்.
நடுகளம்: ராபல் அகஸ்டோ(பிரசில்), கிரிகோரி நெல்சன்(நெதர்லாந்து), ஆண்ட்ரியா ஒர்லாண்டி(இத்தாலி), பிரான்சிஸ்கோ பெர்னான்டஸ், தாய்சிங், அனிரூத் தபா, ஜெர்மன்பிரீத் சிங், சீனிவாசன் பாண்டியன் (தமிழ்நாடு), ஐசக் வன்மால்சவமா, பெத்தேஸ்வர் சிங், சோனுன்மாவியா.
முன்களம்: ஜேஜே லால்பெகுலா, முகம்மது ரபி, ஆண்டோனியோ சலோம் (பாலஸ்தீனம்).