ISL Football Chennai team
ISL Football Chennai team

ISL Football Chennai team சென்னை : 10 அணிகள் மோதும் 5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவின் பல இடங்களில் நடந்து வருகின்றது.

இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை மற்றும் கேரளா அணிகள் மோதினர்.

ஆட்டம் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டது. இரு அணிகளுமே வலுவான அணிகள் என்பதால் ஆட்டத்தின் விறுவிறுப்பு இறுதி வரை குறையவே இல்லை.

சென்னை அணி எதிரணிக்கு எதிராக 11 முறை கோல் அடிக்க முயன்றது, இருந்தும் எதிரணியின் கோல் கீப்பர் சென்னை அணியின் முயற்சியை தடுத்துவிட்டார்.

மேலும், கோல் அடிக்க பல எளிய வாய்ப்புகள் கிடைத்த போதும் சென்னை அணி வீரர்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது கொஞ்சம் கோபத்தையும், சோகத்தையுமே தந்தது.

அதே சமயத்தில், கேரள அணியும் எந்த கோலும் அடிக்கவில்லை, இறுதியில் 0-0 என ஆட்டம் டிரா செய்யப்பட்டது.

இதுவரை நடந்த 9 ஆட்டங்களில் சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்றும் 2 போட்டிகளை டிரா செய்துள்ளது, 6 தோல்விகளுடன் சென்னை அணி உள்ளது.

இந்த நிலையில் சென்னை அணி அடுத்த சுற்று அதாவது பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடினமாக இருக்கும்.

இன்று மாலை, 7.30 மணிக்கு பெங்களூரு அணி புனே அணியை எதிர்கொள்ள இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here