Is there clash between Shankar and Kamal because of Indian 2?
Is there clash between Shankar and Kamal because of Indian 2?

பார்த்திபன் இயக்கியுள்ள ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமலும் ஷங்கரும் பங்கேற்கிறார்கள்.

Is there clash between Shankar and Kamal because of Indian 2? – இந்தியன் 2 படத்தை ஓரங்கட்டி விட்டு ஷங்கர் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இதனால் கமலுக்கும் ஷங்கருக்கும் சண்டை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

ஆனால் இதை பொய்யாக்கும் விதமாக விரைவில் ஒரு சம்பவம் நடைபெற உள்ளது.

பார்த்திபன் இயக்கியுள்ள ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவர்கள் இருவரும் பங்கேற்று இந்த வதந்திக்குமுற்றுப்புள்ளி வைக்க உள்ளார்கள்.