பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறாரா மீனா? இதுதான் காரணமா..!
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து மீனா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் முதல் பாகம் முடிந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இந்த கதாபாத்திரத்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ஹேமா விலகப் போவதாகவும் அதற்கு காரணம் தங்க மயில் உடனான சண்டை தான் எனவும் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பின் போது இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக ஹேமா இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.