Indian 2

Indian 2 Villian : இந்தியன் 2 படத்தின் வில்லன் குறித்த தகவல்கள் தற்போது நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளன.

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் 1992-ம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் இந்தியன்.

தல 59 படத்தில் இந்த நடிகருமா? – அப்போ ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்!

22 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்க உள்ளது. இதிலும் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடிக்க காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க உள்ளார்.

சித்தார்த் முக்கிய வேடத்தில் கமல்ஹாசனுக்கு பேரனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் வில்லன் யாராக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தளபதி 63 என்ற வார்த்தைக்கே இப்படியா? பிரபல நடிகரை அதிர்ச்சியாக்கிய ரசிகர்கள்.!

தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமார் தான் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.