AK 59 Update
AK 59 Update

AK 59 Update : தல 59 படத்தில் பிரபல பாலிவுட் நடிகரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது நிச்சயம் தல ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு டி.இம்மான் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அஜித் இந்த படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் இயக்கத்தில் உருவாக உள்ள தல 59 படத்தில் நடிக்க உள்ளார்.

பிங்க் படத்தின் ரி-மேக்காக உருவாக உள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகையான வித்யா பாலன் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்திருந்தன.

இதனை தொடர்ந்து அமிதாப் பச்சன் அவர்களும் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ள்ளது. ஆனால் இது இது உண்மையா? என தெரியவில்லை.

ஒரு வேளை இது உண்மையானால் அஜித் ரசிகர்களுக்கு தல 59 நிச்சயம் டபுள் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.