Indian 2
Indian 2

Indian 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்து வசூலில் பல சாதனைகளை புரிந்த படம் இந்தியன்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது.

ஓவியா ரசிகர்களுக்கு நாளை ஒரு செம டிரீட் – என்னன்னு நீங்களே பாருங்க!

லைக்கா தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை போடப்பட்டது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கிய பாடில்லை. மேக்கப் சரியில்லை, பைனான்ஸ் கிடைக்கவில்லை என பல காரணங்கள் சொல்லப்பட்டது.

இந்நிலையில் பைனான்ஸ் கிடைக்காததுதான் இப்படத்தின் சிக்கல் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதனால் லைக்காவிற்கு பதிலாக இப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை ரிலையன்ஸிடம் ஷங்கர் ஒப்படைக்க உள்ளாராம்.

ஆனால் அவர்களோ படத்தை தயாரிக்க தயார் ஆனால் நாங்கள் சொல்வது போல் கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிறார்களாம்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஷங்கர் முழித்து வருகிறாராம். மேலும் தேர்தல் முடிந்து கமல் வந்த பிறகு இதைப்பற்றி பேசிக்கொள்ளலாம் என்ற யோசனையிலும் உள்ளாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.