kalavani 2 Trailer

kalavani 2 Trailer : 

தமிழ் சினிமாவில் 2010-ம் ஆண்டு வெளிவந்த படம் களவாணி. அமைதியாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை ருசித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தயாராகி வருகிறது.

அஜித் விஜய்க்கு ஜோடியாக நடித்த மந்த்ராவா இது? – அதிர்ச்சியை கிளப்பிய புகைப்படங்கள்.!

முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே இயக்க விமல், ஓவியா ஆகியோர் இதிலும் கதை மாந்தர்களாக நடிக்கிறார்கள்.

இதற்கிடையில் நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்திருப்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

kalavani 2 Trailer

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் நாளை தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் திரைக்கு வரும் என்றும் படக்குழு கூறியுள்ளனர்.

கடைசியாக வெளியான 90 எம்.எல் படம் வணிக ரீதியாக தோல்வியுற்ற நிலையில் இந்த படமாவது ஓவியாவிற்கு வெள்ளித்திரையில் வெற்றியை தேடி தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.