இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்திய திரை உலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீவிரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தியன் 2 திரைப்படத்தின் ஆக்சன் காட்சிகள் இன்றுடன் சென்னையில் நிறைவு பெற இருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து படக்குழு சில முக்கியமான காட்சிகளை படமாக்க தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.