இந்தியன் 2 திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து ஒரே நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக திகழும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001 -ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

கோலிவுட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை தொடர்ந்து தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல ஓடிடி தளமான netflix நிறுவனம் இந்தியன் 2 திரைப்படத்திற்கான டிஜிட்டல் உரிமையை அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து ரூ.210 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.