இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்திய அணிக்கு இது பயிற்சி ஆட்டமாக அமைந்துள்ளதால் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

இந்திய அணி ஆதிக்கத்தை தொடர உற்சாகமாகக் களமிறங்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாகப் போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.