India 'A' Team : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News, manish pandey

India ‘A’ Team :

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், 148 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா ஏ அணி 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

மணிஷ் பாண்டே தலைமையிலான இந்தியா ஏ அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் 2 போட்டியிலும் வென்ற இந்தியா அணி 2-0 என முன்னிலை வகிக்க, 3வது போட்டி நார்த் சவுண்டு, சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் (ஆன்டிகுவா) நடைபெற்றது. டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன் குவித்தது.

கேப்டன் மணிஷ் பாண்டே அபாரமாக விளையாடி சதம் விளாசினார். அவர் சரியாக 100 ரன் (87 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடக்க வீரர் ஷுப்மான் கில் 77 ரன் (81 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), ஷ்ரேயாஸ் அய்யர் 47 ரன், ஹனுமா விஹாரி 29, இஷான் கிஷண் 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அன்மோல்பிரீத் சிங் டக் அவுட்டானார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை தெறிக்க விட்ட இந்திய அணி – ஆனாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.!

குருணல் பாண்டியா 2 ரன், வாஷிங்டன் சுந்தர் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் ஏ பந்துவீச்சில் ஷெப்பர்டு, கார்ன்வால் தலா 2, கீமோ பால், ரேமன் ரீபர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 296 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஏ களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் கேம்ப்பெல் 21, சுனில் அம்ப்ரிஸ் 30 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ரீபர் 19, கேப்டன் ரோஸ்டன் சேஸ் 15 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.