
India vs West Indies 4th OD : மும்பையில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டித் தொடரில் டாஸ்க் வென்று முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி.
வழக்கம் போல் ரோகித் மற்றும் தவான் ஜோடியே ஆட்டத் தொடக்க வீரர்களாக களம் இறங்கி ஆட்டத்தை தொடங்கினர்.
இன்று ரோகித் சற்று கவனத்துடன் ஆட்டத்தில் விளையாடினார் என்றே கூற வேண்டும். தவான் சிறப்பாக தொடங்கி யாரும் எதிர்பாராத விதமாக 36 ரன்களில் ஆட்டமிழக்க, உலக சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்த்த கோலியும் 16 ரன்களில் ஆட்டமிழந்து பெரிய ஏமாற்றத்தை அளித்தார்.
ஆனால் அடுத்ததாக களம் இறங்கிய ராயுடு 100 ரன் எடுத்தார். நல்ல பாட்னர் ஷிப் இருக்க ரோகித் மற்றும் ராயுடுவின் ஜோடிகள் 211 ரன்கள் விளாசி தள்ளினார்.
ரோகித் ஆட்டமிழக்க தல தோனி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 377 ரன் எடுத்து.
அடுத்து 378 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மே .தீ., அணி இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டனர் .
பெரிதும் நம்பப்பட்ட மே.தீ ., அணியின் ஹிட்மயர் சற்றும் எதிர் பார்க்காமல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றும் ஹோல்டர் 54 ரன் எடுத்து அடுத்தடுத்து வந்தவர்கள் ஆட்டமிழக்க மொத்தமாக 50 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்திய அணி எளிதாக 224 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .