இலக்கியா சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் முக்கிய நடிகர் ஒருவர்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று இலக்கியா. இந்த சீரியலில் ஹீரோவாக நந்தன் லோகநாதன் நடிக்க ஹீரோயினாக ஹீமா பிந்து நடித்து வருகிறார்.

ஹீரோ நந்தனின் தம்பியாக கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் சுந்தரி சீரியல் புகழ் ஜெய் ஸ்ரீநிவாஸ் நடித்து வந்தார். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள புத்தம் புதிய சீரியலான மீனா தொடரில் நாயகனாக நடித்த தொடங்கியுள்ளார்.

இதன் காரணமாக இலக்கியா சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். மேலும் இனி அவருக்கு பதிலாக சுந்தரி சீரியல் புகழ் அரவிஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுந்தரி சீரியலில் சித்து என்ற கதாபாத்திரத்தில் இருந்தும் ஜெய் ஸ்ரீநிவாஸ் விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.