Pushpa 2

கோவில் விவகாரம்..வதந்திகளை நம்ப வேண்டாம் இளையராஜா விளக்கம்..!

வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இளையராஜா விளக்கம் கொடுத்துள்ளார்.

ilaiyaraja latest tweet update
ilaiyaraja latest tweet update

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ஜொலித்து வருபவர் இளையராஜா. இவர் ஆயிரத்திற்கும் மேல் பாடல்களை எழுதிப் பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக இருந்து வருகிறார். தற்போது இவர் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் கருவறைக்குள் முன்புள்ள மண்டபத்தில் நுழைந்தபோது அவர் தடுக்கப்பட்ட நிலையில் மண்டபத்தின் அருகே நின்று கோவில் மரியாதையை ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல விட்டுக் கொடுக்கவும் இல்லை நடக்காத செய்தியை நடந்ததாக பரப்புகிறார்கள் இந்த வதந்திகளை ரசிகர்களும் மக்களும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.