விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் எப்போது என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Edam Porul Eval Movie Release : தமிழ் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்தவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விஷ்ணு விஷால் நடித்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் முதல் படமாக இடம் பொருள் ஏவல் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் பரவியது.
இதுகுறித்து தற்போது தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூலை மாதத்தில் இப்படம் வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவுவதாக தெரியவந்தது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தயவு செய்து தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள் என கூறியுள்ளார்.
— Subash Chandra Bose (@itisbose) May 22, 2020
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர் ஒருவர் இந்தப் புரளி கிளம்பியதால் தான் நீங்க இடம் பொருள் ஏவல் படம் பன்னதே மனதே ஞாபகம் வந்துச்சா ! ஏன் ரிலீஸ் பன்னனும்னு idea வே இல்லையா….. என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப் புரளி கிளம்பியதால் தான் நீங்க இடம் பொருள் ஏவல் படம் பன்னதே மனதே ஞாபகம் வந்துச்சா ! ஏன் ரிலீஸ் பன்னனும்னு idea வே இல்லையா…..
— ஜா.பால் ஸ்டீபன் 🇻🇦 (@GPAULSTEPHEN) May 22, 2020
நேரடியாக OTT-யில் வெளியிடுங்கள் தியேட்டரில் வெளியிடுவதற்காக காத்திருக்காதீர்கள் என கூறியுள்ளார் இன்னொரு ரசிகர்.
Release in OTT, don't wait for theatre
— AVMR (@yuvanbakthan) May 22, 2020