சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் இந்தி ரைட்ஸ் 100 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

100 கோடிக்கு விற்பனையான சூர்யா 42 திரைப்பட ரைட்ஸ்.. வெளியான வியக்க வைக்கும் தகவல்.!!

வரலாற்று சிறப்புமிக்க திரைப்படமாக உருவாகி வரும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பொருட்ச அளவில் தயாராகி வருகிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என மொத்தம் 10 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் இந்த படத்தின் ஹிந்தி திரையரங்க ரிலீஸ் உரிமையை Jayantilal Gada என்ற நிறுவனம் ரூபாய் 100 கோடிக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

100 கோடிக்கு விற்பனையான சூர்யா 42 திரைப்பட ரைட்ஸ்.. வெளியான வியக்க வைக்கும் தகவல்.!!

சூர்யாவின் திரைப்படத்தின் இந்த வியாபாரம் அவரது திரைப்பயணத்தின் உச்சம் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.