Hindi Dubbed Theri in TRP Record
Hindi Dubbed Theri in TRP Record

இந்தி தொலைக்காட்சி TRP-ல் தளபதி விஜய் மாஸ் காட்டியுள்ளார். இதுகுறித்த ஆதாரத்தை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

Hindi Dubbed Theri in TRP Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டி வருகின்றன.

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படம் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போது TRP-யில் அதிரடி வேட்டையாடியது.

தற்போது இந்த படத்தின் இந்தி டப்பிங் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. டாப் 5 லிஸ்டில் தெறி டப்பிங் திரைப்படம் TRPல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என பார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்த ஆதாரங்களை வெளியிட்டு தளபதி ரசிகர்கள் தமிழில் மட்டுமல்ல இந்தியிலும் எங்க தலைவன் செம மாஸ் என கொண்டாடி வருகின்றனர்.