Health Department Secretary Radhakrishnan Press Meet
Health Department Secretary Radhakrishnan Press Meet

தமிழகத்தில் கொரானா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Health Department Secretary Radhakrishnan Press Meet : தமிழகத்தில் கொரோனா வைரஸால் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரானா பரிசோதனை மற்றும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தமிழகத்தின் கொரானா வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் மக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

அவ்வாறு பின்பற்றினால் மட்டும்தான் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியும். அரசின் வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி மக்கள் நடந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக வெகு விரைவில் தமிழகத்தில் கொரானாவை ஒழித்து விடலாம் என கூறியுள்ளார்.

தனுஷின் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் – முழு லிஸ்ட் இதோ!

மேலும் அவர் இந்த வைரஸ் தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோயாளிகளை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை குறைக்கலாம்.

அதற்காகத்தான் ஆரம்ப நிலையிலேயே நோயாளிகளை கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக காய்ச்சல் முகாம்கள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் மதுரை போன்ற நகரங்களில் காய்ச்சல் முகாம்கள் மூலமாக நோயாளிகள் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சமீபத்தில் தேனி மாவட்டத்தில் ஒரு புஷ்கார்ட்டில் ஒரு வயதான பெண்ணின் சடலம் தகனம் செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றார். மேலும் புதியதாக 150 அவசர ஊர்திகள் வாங்க பட உள்ளதாகவும் அவை மாவட்டங்களின் தேவைக்கு ஏற்ப வினியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.