H1B Visa Rules in America
H1B Visa Rules in America

H1B Visa Rules in America : அமெரிக்காவில் ஏற்கனவே பணியாற்றிய வெளிநாட்டவர்கள் தங்களது பணிகளை மீண்டும் தொடர்வதற்கு அனுமதிக்கும் வகையில் H1B நுழைவு விசா விதிகளின் தளர்வுகள் வழங்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

H1B விழாவின் மூலமாக வெளிநாட்டவர்களை அமெரிக்கா பணியில் அமர்த்தி வருகிறது. முக்கியமாக H1B விசா மூலமாக இந்தியர்களை அதிக அளவில் பலனடைந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா நோய் தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் H1B வெளிநாட்டு பணியாளர்கள் காண வீசா வழங்கப்படாது என்று அமெரிக்க கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி அறிவித்து இருந்தார்.

அத்துடன் அமெரிக்காவில் ஏற்கனவே பணியாற்றி தற்காலிகமாக சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளவர்களுக்கு H1B விசா வீசா வழங்கப்பட என்று அமெரிக்கா அறிவித்தது. இதனால் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றிய இந்தியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனால் தற்போது H1B விசா வழங்குவதற்காக விதிமுறைகளில் சில தளர்வுகள் அமெரிக்கா அறிவித்துள்ளது. அதில் ‘அமெரிக்காவில் ஏற்கனவே பணியாற்றி வந்திருந்தவர்களுக்கு H1B,L1 விசாக்களை வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேவேளையில் அத்தகைய வெளிநாட்டுப் பணியாளர்கள் ஏற்கனவே பணியாற்றிய நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஏனென்றால் ஏற்கனவே பணியாற்றி வந்தவர் களுக்கு பதிலாக புதிய பணியாளர்களை நியமிப்பது நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தப் பணியாளர்கள் தற்போது வீட்டில் இருந்து அதே பணியை தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு H1B வீசா வழங்கப்பட மாட்டாது. புதிய தளங்கள் அனைத்தும் வெளிநாட்டு பணியாளர்களின் மனைவிக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது’.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.