‘ஜனநாயகன்’ படத்தை தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ்

விஜய்யின் அரசியல் பேசும் படம் ‘ஜனநாயகன்’. இப்படம் பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் அல்ல.

தற்போது ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடித்தன. மற்ற நடிகர்களின் காட்சிகள் இன்னும் சில நாட்களில் நிறைவுபெறும். கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது.

இந்நிலையில் ‘ஜனநாயகன்’ பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, தனுஷ் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் ஹெச்.வினோத். இப்படத்தினை லலித்குமார் தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘ஜனநாயகன்’ படத்தின் தமிழக உரிமையினை லலித் குமார் தான் பெறுவார் எனவும் கூறப்படுகிறது.

‘ஜனநாயகன்’ படத்துக்கு ஒப்பந்தமாகும் முன்பு தனுஷ் படத்தை இயக்குவதாக இருந்தார் ஹெச்.வினோத். தற்போது விஜய் படம் நிறைவு பெற்றதும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். தனுசும் ‘இட்லி கடை’ படத்தை நடித்து இயக்கி முடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸாகிறது.

h vinoth has decided to direct a dhanush film