விஜயின் லியோ பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜி பி முத்துவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ஜி.பி.முத்து டிக் டாக் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் ஒரு வாரம் வரை இருந்த இவர் அதன் பிறகு வெள்ளி திரையிலும் சில பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்.

மேலும் அதே தொலைக்காட்சி சேனலில் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது கோமாளியாக பங்கேற்று அசத்தி வருகிறார். இந்த நிலையில் இணையதளத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வரும் விஜய்யின் லியோ படத்தின் “நா ரெடிதான்’ பாடலுக்கு பலரும் ரீல்ஸ் வீடியோக்களை செய்து வெளியிட்டு வரும் நிலையில் அப்பாடலுக்கு ஜிபி முத்து குத்தாட்டம் போட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து பயங்கரமாக வைரலாகி வருகிறது.