நடிகர் விவேக் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ள நிலையில் அவருக்கு அரசு மரியாதை அளிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

Government Action on Vivek Funeral : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் நேற்று திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இவருடைய உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு விவேக் அவர்களுக்கு அரசு மரியாதை அளிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது. தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் தமிழக அரசு அனுமதி கேட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதில் வந்ததும் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.