பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீசன் 2 உருவாகிறதா என சந்தேகத்தை எழுப்பி உள்ளது கோபி வெளியிட்ட புகைப்படம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று பாக்கியலட்சுமி.
ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் தற்போது முழுக்க முழுக்க நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. காரணம் எல்லோருக்கும் இரண்டு ஜோடி என இதை கேவலமாக மாறி இருப்பது தான். இதன் காரணமாக டிஆர்பி ரேட்டிங் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இப்படியான நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பொம்மை ஜோடியின் புகைப்படத்தை வெளியிட்டு பாக்கியலட்சுமி பார்ட் 2 என தெரிவித்துள்ளார்.
இதை பார்த்து ரசிகர்கள் எனது பாக்கியலட்சுமி அடுத்த சீசன் தொடங்குகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அந்த ஆண் பொம்மை நீங்கள் என்றால் பெண் பொம்மை யார் பாக்கியவா ராதிகாவா எனவும் கிண்டல் அடிக்கின்றனர்.