ஜீ தமிழ் நாயகியுடன் ஊர் சுற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சிறகடிக்க ஆசை மீனா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் கோமதி பிரியா பாலகுமாரன்.
இதற்கு முன்னதாக வேலைக்காரன் சீரியலில் நாயகியாக நடித்து இருந்தாலும் இந்த சீரியல் தான் பேரையும் புகழையும் வாங்கி கொடுத்தது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சீரியல்களிலும் பிஸியாக இருந்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நாயகி சௌந்தர்யாவுடன் ஃபைட் டைமில் அவுட்டிங் சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் இருவரும் கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் இருக்கின்றனர். இதோ அந்த வீடியோ