Ghilli Secrets

Ghilli Secrets : கமர்ஷியல் படங்களோட கில்லியா இருக்க படம் விஜய்யோட கில்லி. இந்த படம் வெளியாகி 15 வருஷம் நிறைவடைஞ்சிருக்கு.

2003-ல மகேஷ் பாபு நடிப்பில தெலுங்குல வெளியான ஒக்கடு படத்த பார்த்த விஜய், அதை தமிழ்ல ரீமேக் செய்ய திட்டமிட்டாரு.

சீன் பை சீன் தெலுங்கு படத்தையே மாத்தி எடுத்திருந்தாலும் தெலுங்க விடவும் தமிழ்ல தான் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு பண்ணுச்சு.

அதுவரையிலான தமிழ் சினிமாவோட எல்லா வசூல் சாதனைகளையும் முறியடிச்ச கில்லி, தென்னிந்திய அளவில முதல் முறையா 50 கோடி வசூல் செஞ்ச படமுங்கற சாதனையையும் படைச்சிச்சு.

’தளபதி 63’ கதைத்திருட்டு நடந்தது இப்படித்தான் – வெளிவந்த அட்லியின் சுயரூபம்!

இந்த நிலையில இந்த படம் வெளியாகி 15-ம் ஆண்டு கொண்டாட்டமா இந்த படம் பத்தின ஒரு ஸ்பெஷல் தகவல இயக்குனர் தரணி இப்போ வெளியிட்டிருக்காரு.

இதில இந்த படத்தோட டைட்டிலை முதல்ல ரஜினி கிட்டதான் தான் சொன்னதாவும் டைட்டிலை கேட்ட ரஜினி இப்பவே இந்த படம் பாதி ஹிட்டாகிடுச்சுன்னு சொன்னதாவும் சொல்லியிருக்காரு.

மேலும் இந்த படத்தோட வெற்றி விழாவில ரஜினி தான் படக்குழுவினருக்கு வெற்றி பதக்கம் கொடுத்தாருங்கறது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.