Pushpa 2

காக்க காக்க, வாரணம் ஆயிரம் படம் கொடுத்த என்மேல சூர்யாவுக்கு நம்பிக்கை வரலை: கவுதம் மேனன் கடும் விமர்சனம்..

நடிகர் சூர்யா மீது கௌதம் வாசுதேவ் மேனன் கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளார். இவர்களிடையே நடந்தது என்ன? இது பற்றிப் பார்ப்போம்..

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் வரும் 23-ந்தேதி வெளியாகவுள்ள திரைப்படம் டாம்னிக் தி அன்ட் லேடீஸ் பர்ஸ். இந்நிலையில், சூர்யா குறித்து, கௌதம் மேனன் பேசுகையில்,

‘சூர்யாவிடம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதையை சொன்னேன். அவர் கதையைக் கேட்டுவிட்டு, இந்தப் படத்திற்கு என்ன ரெஃபரன்ஸ் எனக் கேட்டார். நான் உடனே, நான் உருவாக்கியுள்ளேன். இது எனது கற்பனையில் உருவான படம். துருவ நட்சத்திரம் படத்தினை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பார்க்கவேண்டும் என நினைத்தேன்.

சூர்யா ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்க யோசித்திருக்கவே கூடாது என்றுதான் நான் யோசித்தேன். காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் அவர் என்னை முழுமையாக நம்பினார். ஆனால், இந்தப் படத்தில் அவர் அப்படி நம்பவில்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளராகவும் நான் இருந்தேன்.

துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தால் என்ன ஆகி விடும்? அடுத்த பட வாய்ப்பு சூர்யாவுக்கு வராமல் போய்விடுமா? அவர் என்னை நம்பவில்லை.

எனக்கு ஃபேவராகக் கூட நான் எதுவும் கேட்கவில்லை. உங்களுக்கு இந்த கதை பிடிக்காமல் இருக்கலாம், புரியாமல் இருக்கலாம். ஆனால், என்ன தப்பாகி விடும்? நான், தான்தோன்றித்தனமாகவோ, தலைக்கனத்துடனோ எதையும் செய்யவில்லை.

நான் ஏன் இன்னும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மீது இவ்வளவு உறுதியாக இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம், படம் கடந்த வாரத்தில் எடுத்ததைப் போல் உள்ளது.

‘மத கஜ ராஜா’ படம் வெளியான பின்னர், எனக்கு இன்னும் கூடுதல் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் வந்துள்ளது. துருவ நட்சத்திரம் படத்தை நான் எடுக்கக் காரணம், பணத்திற்காக இல்லை. அதேபோல், நான் எந்த இடத்தில் இருக்கின்றேன் என்பதற்காக இல்லை. படத்தை உலகத்தரத்தில் கொடுக்க நினைத்தேன். அவ்வளவுதான்.

துருவ நட்சத்திரம், படத்தில் யார் வேண்டுமானாலும் பணியாற்ற முடியாது எனக் கூறியிருக்கலாம். ஆனால், சூர்யா நடிக்கமாட்டேன் எனக் கூறியது எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. என்ன தப்பாக போய்விடும்’ என ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இவரது பேச்சு, பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

மேலும், துருவ நட்சத்திரம் விரைவில் வெளியாகவும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இயக்குனரின் விமர்சனத்திற்கு, அந்த நடிகரின் விளக்கம் என்னவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.!

gautham menon slams suriya for he not act dhruva natchathiram
gautham menon slams suriya for he not act dhruva natchathiram