Gautham Menon
படத்தின் தயாரிப்பாளரே அஜித் படத்தின் வசூலை குறைத்து சொல்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார் கெளதம் மேனன்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் மேனன், இவர் அஜித்தை வைத்து எனை அறிந்தால் படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைக்கவில்லை. இதனை கெளதம் மேனனே சில பேட்டிகளில் கூட கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது கெளதம் மேனன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனை அறிந்தால் திரைப்படம் நல்ல வசூலுடன் நன்றாக தான் சென்றது.

ஆனால் அப்படத்தின் தயாரிப்பாளரே படத்தின் வசூலை குறைத்து கூறுவது போல எனக்கு தோன்றுகிறது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.