பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், தற்போது சமையல் காஸ் விலையும் உயர்ந்து வருகிறது.

டெல்லியில் மானியம் இல்லாத காஸ் விலை, ரூபாய். 59 – வும் , மானியம் உள்ள காஸ் விலை ரூபாய். 2.89 வும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும், இதனால் சாமானிய மக்களுக்கு எந்தவித பெரிய பாதிப்பும் இல்லை என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது .