கருடன் திரை விமர்சனம்
மக்களை கவருமா கருடன்? முழு விமர்சனம் இதோ!
கருடன் படம் எப்படி இருக்கு? மக்களை கவருமா என்பதை எல்லாம் விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடிக்க தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார் சூரி. இவரது நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் கருடன். இந்த படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படத்தின் கதைக்களம் :
ஆதியும் (சசிகுமார்) கர்ணாவும் (உன்னி முகுந்தன்) உயிர் நண்பர்களாக இருந்து வருகின்றனர். எந்தவொரு நாதியும் இல்லாத நபராக வரும் சொக்கனுக்கு அடைக்கலம் கொடுத்து சிறு வயதில் இருந்தே அவரை வளர்த்து வருகிறார் கர்ணா. அவருக்கு எப்போதுமே நன்றியுள்ள நாய் போல விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைத்து வாழ்ந்து வரும் சூரி ஒரு கட்டத்தில் வெகுண்டு எழுந்து செய்யும் சம்பவம் தான் இந்த கருடன் படத்தின் கதை.
படத்தை பற்றிய அலசல் :
சூரி ஆக்ஷன் ஹீரோவாக அசத்த சசிகுமாரும் உன்னி முகுந்தனும் போட்டி போட்டு கொண்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களும் திறமையான நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்து உள்ளனர்.
துரை செந்தில்குமார் வித்தியாசமா கதையை கையில் எடுத்து திறம்பட இயக்கியுள்ளார். திரைக்கதை மூலம் நமது கவனத்தை ஈர்க்கிறார்.
யுவனின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.. ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.
மொத்தத்தில் கருடன் கவர்கிறான்.