வாடிவாசல் : தரமான அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்.. ரசிகர்கள் ஹேப்பி..!
வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் ஜி.வி பிரகாஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார் மேலும் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாக உள்ளது.
கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இது மட்டுமில்லாமல் இந்த படம் காளை சம்பந்தப்பட்டது என்பதால் சூர்யா பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் வாடிவாசல் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை ஜிவி பிரகாஷ் கொடுத்துள்ளார். அதாவது இந்த படத்திற்கான இசையமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக புகைப்படத்துடன் பதிவை அறிவித்து உள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Vaadivaasal song composing has started . ✨ @theVcreations @Suriya_offl pic.twitter.com/squZGM0dyz
— G.V.Prakash Kumar (@gvprakash) March 7, 2025