திருமண வாழ்க்கை குறித்து இசைவானி மூடி மறைத்தது ஏன் என அவரது தோழிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Friends About Isai Vani Divorce : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 5 வது சீசனில் 18 போட்டியாளர்களில் போட்டியாளராக உள்ளே சென்றவர் கானா பாடகி இசைவாணி. இந்த நிகழ்ச்சியில் இதுவரை இவர் தன்னுடைய குடும்ப கஷ்டம் தான் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தார். ஆனால் தனக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது என்பதைப் பற்றி அவர் பேசவில்லை.

திருமண வாழ்க்கை குறித்து இசைவாணி மூடி மறைத்தது ஏன்?? தோழிகள் கொடுத்த ஷாக் தகவல்

இதனையடுத்து இசைவாணி தன்னுடைய திருமண வாழ்க்கையைக் குறித்து எதுவும் சொல்லாமல் மூடி மறைத்து விட்டதாக சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியது. அதோடு இவர்களின் திருமணக்கோல புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின.

இந்தநிலையில் இசை வாணியின் திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளனர் அவரது தோழிகள். கடந்த 2019ஆம் ஆண்டு ட்ரம்ஸ் இசைக்கலைஞர் சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரது திருமணமும் அவசர அவசரமாக நடைபெற்றது. இது திருமண வாழ்க்கை சரியாக இருக்காது எனத் தெரிந்தும் அவள் இறுக்கி பிடித்தாள். ஆனாலும் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனால் அவள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த பதி அவளை அதிலிருந்து மீட்டது நாங்கள் தான். திருமண வாழ்க்கை பற்றி கேட்டால் அவள் மீண்டும் மன அழுத்தத்திற்கு சென்று விடுவாள். அதன் காரணமாக இதைப் பற்றி அவள் பேசாமல் இருந்திருக்கலாம். அல்லது அவள் பேசியதை விஜய் டிவி எடிட் செய்திருக்கலாம் என கூறியுள்ளனர்.